தமிழ்நாடு

உருட்டி, மிரட்டி ஓட்டிய வீரர்கள் - தடதடவென தாவி ஓடி பரிசுகளை வென்ற மாடுகள்

kaleelrahman

கடலாடி அருகே மாசா முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே திருஆப்பனூர் ஸ்ரீஅரியநாயகி அம்மன் கோயில் மாசா முளைக்கட்டு திருவிழாவை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், பெரிய மாட்டு வண்டிக்கு பந்தயத்திற்கு 12 கிலோமீட்டர் தூரமும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்திற்கு 10 கிலோ மீட்டர் தூரமும் எல்கையாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரருக்கு ரொக்கப்பரிசு மற்றும் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 மாட்டுவண்டியுடன் வீரர்கள் பங்கேற்றனர்.