ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தோல் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் சன்னதி தெருவில் பத்தாண்டுகளுக்கு மேலாக அக்பர் அலி என்பவர் தொழுநோய் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென அங்கு சோதனை மேற்கொண்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் மற்றும் மருத்துவ குழுவினர் அவர் போதிய கல்வி பயிலாமலும், முறையான சான்றிதழ்கள் இல்லாமலும் அந்தப் பகுதியில் தோல் நோய்க்கான சிகிச்சை அளித்து வந்ததை கண்டறிந்தனர்.
பின்னர் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். போலி மருத்துவரிடம் 10 வருடம் சிகிச்சை பெற்று வந்ததை எண்ணி அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.