ராமநாதபுரம்: வாகன விபத்து சிசிடிவி காட்சி புதிய தலைமுறை
தமிழ்நாடு

ராமநாதபுரம்: நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி... வெளியான சிசிடிவி காட்சி! #CCTV

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில், வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் (பிப் 1) மாலை உச்சிப்புளி நோக்கி நகர் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த நகர் பேருந்திற்கு அருகே இருசக்கர வாகனம் ஒன்றும் வந்த கொண்டிருந்தது. அந்த இருசக்கர வாகனம் திடீரென உச்சிப்புளி புதுமடம் விளக்கு பகுதிக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர் வலது புறமாக புதுமடம் நோக்கி வாகனத்துடன் திரும்பினார்.

ராமநாதபுரம்: வாகன விபத்து சிசிடிவி காட்சி

அப்போது பின்னால் வந்த பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியதில், வாகன ஓட்டி பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்டார். பேருந்தை ஓட்டுநர் சாமர்த்தியமாக உடனடியாக நிறுத்தியதால், நல்வாய்ப்பாக அந்நபர் உயிர் தப்பினார்.

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.