14 மீனவர்கள் கைது pt desk
தமிழ்நாடு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 14 ராமநாதபுரம் மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பன் பகுதி மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: அ.ஆனந்தன்

பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆரோக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு மூலம் 14 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதையடுத்து அவ்கள் இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

Fisherman

அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக படகுடன் 14 மீனவர்களையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மன்னார் கடற்படை முகாமிற்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், மீனவர்களிடம் முதல் கட்ட விசாரணையை முடித்த கடற்படையினர், மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இன்று காலை 11 மணிக்கு மேல் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.