Malaisamy
Malaisamy pt desk
தமிழ்நாடு

மதுபோதையில் மோட்டர் Switch-ஐ Off செய்யாத பேரூராட்சி ஊழியர்... செயல் பொறியாளர் எடுத்த அதிரடி முடிவு!

Kaleel Rahman

ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள 2,332 கிராம மக்களின் அன்றாட பயன்பாட்டிற்குத் தேவையான குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

2011ல் ஆட்சி மாற்றத்துக்குப்பின், 2021 வரை அத்திட்டம் பெரும்பாலான இடங்களில் தொய்வடைந்தது. இதில் இப்பகுதியிலுள்ள மண்டபம் என்ற பேரூராட்சி மக்கள் பாதிக்கப்பட்டனர். 18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியில், 13.40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை நிலவிவந்தது. கடுமையான தண்ணீர் தேவை ஏற்பட்டதால், அவர்களின் நிலையை குறிப்பிட்டு அப்பகுதியிலுள்ள பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் சமூக வலைதளங்களில் பதிவுகள் இட்டனர்.

Railway station

இதையடுத்து ஏப்ரல் 28 ஆம் தேதி அப்பகுதியில் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதுபற்றிய பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்தும் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் தரப்பில் முக்கியமாக, “கிணறுகளில் இருந்து மேல்நிலை தொட்டிகளுக்கு நீரை ஏற்ற On செய்யும் மின் மோட்டார் ஸ்விட்சை, உரிய நேரத்தில் நிறுத்த தவறியதால் 5-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. இதனால்தான் முக்கியமாக தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது” என்பது குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.

இதையடுத்து தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த, 18 வார்டுகளுக்கு தலா 6 வார்டுகள் வீதம் சுழற்சி முறையில் பொது குழாய் ஏற்படுத்துவது, வீட்டு இணைப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இப்பணியை முறைப்படுத்த தண்ணீர் திறந்து விடப்படும் நாட்களில், சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கையொப்பம் பெறவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

collector office

அப்படி கடந்த ஏப்.29 இரவு, மண்டபம் தென் கடற்கரை பகுதியில் உள்ள மைக்குண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு கிணற்றில் இருந்து நீர் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த மோட்டார் நிறுத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தண்ணீர் வழிந்தோடி உள்ளது. இதை நிறுத்த சம்பந்தப்பட்ட ஊழியரை அப்பகுதி இளைஞர்கள் தேடியபோது, பணியில் இருந்த அந்த ஊழியர் அளவுக்கதிமாக மது போதையில் இருந்தது அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.

அதை வீடியோ எடுத்த அவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிடவே, அது வைரலானது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியர் மலைசாமியை சஸ்பெண்ட் செய்து செயல் பொறியாளர் கலைச்செல்வி நடவடிக்கை எடுத்துள்ளார்.