தமிழ்நாடு

ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு

ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு

Rasus

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

இதனிடையே கடந்த 2014 டிசம்பர் 10-ம் தேதி ராமஜெயத்தின் மனைவி லதா ராமஜெயம், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ தொடங்கியுள்ள விசாரணை சூடுபிடிக்க உள்ள நிலையில் விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.