அன்புமணி - ராமதாஸ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“விருப்பம் இல்லாதவங்க யாரா இருந்தாலும்...” அன்புமணியை எச்சரித்த ராமதாஸ்... என்ன நடந்தது?

பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் காரசார மோதல்.

ஜெ.நிவேதா

பாமக-வின் பொதுக்குழுவில் இன்று நடந்தது. இதில், புதுச்சேரி பொதுக்குழுவில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் என ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவை நான்தான் எடுப்பேன்” என ராமதாஸ், அன்புமணியிடம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Anbumani

இதையடுத்து, கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே பொறுப்புகள் வழங்கப்படுவதாக அன்புமணி எதிர்ப்பு. “நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு. விருப்பம் இல்லாதவர்கள் யாராகினும் கட்சியிலிருந்து வெளியேறலாம்” என்று ராமதாஸ் அன்புமணிக்கு மேடையிலேயே அறிவுறுத்தல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, “பனையூரில் புதிதாக கட்டியுள்ள எனது அலுவலகத்தில் இனி தொண்டர்கள் என்னை சந்திக்கலாம்” என்று அன்புமணி ராமதாஸ் தொண்டர்களிடையே பேசியுள்ளார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நாள் பனிப்போர் பகிரங்கமாக வெடித்தது, அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.