தமிழ்நாடு

ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது: ஆய்வில் தகவல்..!

ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது: ஆய்வில் தகவல்..!

Rasus

ராமர் பாலம் எனப்படும் சேதுப்பாலம் 18,400 வருடங்கள் பழமையானது என ஆய்வு ஒன்று கூறுகிறது.

தமிழக- இலங்கை கடல் பகுதிக்கு இடையே ராமர் பாலம் எனப்படும் சேதுபாலம் இருக்கிறது. இந்தப் பாலம், ராம பிரான் இலங்கைக்கு செல்வதற்காக வானர சேனைகளும், அவருடைய வீரர்களும் கட்டியது என புராணக் கதைககள் கூறுகின்றன. ஆனால் அது இயற்கையாகவே உருவானது என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த வழியாக சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட இருந்தபோது சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் சேது பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு ஒன்று கூறுகிறது. அண்ணா பல்லைக்கழக மாணவர்களும் , மெட்ராஸ் பல்லைக்கழக மாணவர்களும் ஒன்றாக இணைந்து ஆய்வு மேற்கொண்டதில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC), பெருங்கடல் தகவல் சேவைக்கான இந்தியத் தேசிய மையம் சார்பில் அளிக்கப்பட்ட நிதி உதவி மூலம் மாணவர்கள் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பாலம் கடந்த 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் பாதிப்பிற்கு ஆளானபோதும், பாலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. சேது பாலத்தின் சாய்வு பகுதி உள்ளிட்ட 3 பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் மணவர்கள் தங்களது ஆய்வினை மேற்கொண்டிருக்கின்றனர்.

மேலும் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போன்ற சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சுனாமி ஏற்பட்டுள்ளதாகவும், அப்போதும் பல நாடுகள் பாதிக்கப்பட்டதாகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளன. மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் நிகழலாம் என்றும், அதற்கேற்றவாறு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.