தமிழ்நாடு

ரத யாத்திரையை தடுத்து நிறுத்திய போலீஸார்!

ரத யாத்திரையை தடுத்து நிறுத்திய போலீஸார்!

webteam

ராமராஜ்ய ரத யாத்திரை மாற்றுப்பாதையில் சென்றதால் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

கேரளாவை மையமாகக் கொண்டு மகாராஷ்டிராவில் இயங்கும் ஸ்ரீ ராம தாஸ மிஷன் யூனிவர்சல் சொசைட்டி எனும் அமைப்பு சார்பில், உத்தரப்பிரதேசம் அயோத்தியில் உள்ள கரசேவக்புரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரை, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகத்தை அடைந்தது. தமிழகத்தில் இந்த ரத யாத்திரை நுழைவதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பையும் மீறி தமிழகத்திற்குள் வந்த ரத யாத்திரை நெல்லை மாவட்டம் புனலூர் வழியாக, செங்கோட்டை பகுதியில் நுழைந்த யாத்திரை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், விருதுநகர், மதுரை வழியாக ராமேஸ்வரத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் போலீஸார் கூறிய ஈசிஆர் பாதையில் செல்லாமல், தேவிப்பட்டினம் வழியாக மாற்றுப்பாதையில் சென்றதால் ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரத யாத்திரை நிர்வாகிகளிடம் பேசிய போலீஸார், மாற்றுப்பாதையில் சென்றால் பிரச்னை வரும் என்பதை எடுத்துக்கூறினர். பின்னர் போலீஸாரின் வார்த்தையை ஏற்று, ரத யாத்திரை திட்டமிட்ட பாதையில் தூத்துக்குடிக்கு புறப்பட்டது.