மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் 6 மாநிலங்களை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அந்தவகையில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஆளும் அதிமுக சார்பில் 3 பேர்களும், திமுக சார்பில் 3 பேரும் மாநிலங்களவைக்கு தேர்வாக முடியும்.
இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தொ.மு.ச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அத்துடன் மீதமுள்ள ஒரு இடம் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மதிமுகவிற்கு ஒதுக்கப்படுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.