தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் காலியாகும் அந்த 6 மாநிலங்களவைத் உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழகத்தில் ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கலுக்கு ஜுலை 1 முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், டி.ராஜா, கனிமொழி ஆகியோரது பதவிக்காலமே வரும் 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அப்படிப் பார்த்தால் ஜூலை 18-ஆம் தேதி நடக்கும் தேர்தல் மூலம் அதிமுகவை சேர்ந்த 3 பேரும், திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக முடியும். அதேசமயம் யார் யார் வேட்பாளராக நிறுத்தப்படபோகிறார்கள் என்பதுதான் அதிக எதிர்பார்ப்பாக உள்ளது.