சி.வி.சண்முகம் Pt web
தமிழ்நாடு

சி.வி. சண்முகம் ராஜினாமா.. மாநிலங்களவை இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!

சி.வி. சண்முகம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது ராஜ்ய சபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்தசூழலில் தான், காலியாகவுள்ள அந்த இடத்துக்கு ஜூன் 18-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Premkumar S

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மாநிலங்களவை பதவியை சிவி சண்முகம் ராஜினாமா செய்திருந்தார். இதனால் காலியாகியுள்ள இடத்துக்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2021 ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம் 2022 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2028 ஜூன் 29 வரை இருக்கிறது. இந்தசூழலில் தான், தற்போது நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மாநிலங்களவை

இந்தசூழலில் தான், காலியாகவுள்ள மாநிலங்களவை இடத்துக்கு ஜூன் 18-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்திருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 1ல் தொடங்கும் என அறிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தற்போதே ஆலோசனையைத் தொடங்கிவிட்டன. அதன்படி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும் என்பதால், தற்போது ஆளுங்கட்சியாகவுள்ள தவெகவுக்கே அதிக வாய்ப்பிருக்கிறது. எனினும், அந்த எம்.பி. இடம் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு தவெக தர வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், தவெகவில் இருந்து ஒருவர் மாநிலங்களவை இடத்திற்கு தேர்வு செய்யப்படும் நிலையில், அக்கட்சியின் முதல் டெல்லி அரசியல் நுழைவாக அது இருக்கும்.

அதேபோல, மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தனது ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அவரது இடத்திற்கும் ஜூன் 18-ம் மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.