தச்சு தொழில் செய்யும்போது துண்டான இளைஞரின் கையை இணைத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞர் தச்சு வேலை செய்துகொண்டிருந்தபோது, அவரது இடது கை மணிக்கட்டு பகுதி முழுவதும் துண்டானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கிருந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அந்த இளைஞர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை மூலமாக துண்டான கைகளை இணைக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, 8 மணி நேரம் போராடி துண்டான இளைஞரின் கையை மருத்துவ குழுவினர் இணைத்து சாதனை படைத்தனர்.