திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள உரசலுக்கு காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபாலும் காரணம் என கூறப்படும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ராகுல் காந்திக்கு வலதுகரம் போல் செயல்படும் கே.சி.வேணுகோபால், தென் இந்திய அளவில் கட்சியின் முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பவராக உள்ளார். தமிழக கூட்டணி முடிவுகளை எடுப்பதிலும் வேணுகோபால் முக்கியமானவராக கருதப்படுகிறார். கேரளாவில் முதல்வராகும் கனவுடன் இருக்கும் வேணுகோபால், தவெகவுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது.
செவ்வாய்க் கிழமை வேணுகோபால் புதுவை வருகை தர உள்ள நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் குறித்தும் அவரிடம், ராகுல் காந்திஅறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், ராகுலின் நண்பரான வேணுகோபால் குறித்து கூறியுள்ள கருத்து அரசியல் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.