தமிழ்நாடு

7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஒத்திவைப்பு

7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஒத்திவைப்பு

webteam


பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை 3 வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழக அரசின் பரிந்துரை தொடர்பான விவரங்களை இணைக்கவும் மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக 2014ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ராஜீவ் காந்தியுடன் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, இதே விவகாரத்தில் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்ததால், அது முடிந்த பிறகே உறவினர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.