தமிழ்நாடு

சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்

webteam

ராஜிவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள முருகன் தனது 13 நாட்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், சிறை வாழ்க்கை வெறுத்ததால் ஜீவசமாதி அடைவதாக கூறி கடந்த 18 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தார். 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்க கோரி மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் முருகன் மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளாததால் சிறைத்துறை டிஐஜி பாஸ்கர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மனைவி நளினியுடனான சந்திப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும், உறவினர்கள் தன்னை சந்திக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் ஏற்கப்பட்டதை அடுத்து அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதையடுத்து முருகன் மனைவி நளினியும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டுள்ளார்.