தமிழ்நாடு

மு.க ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் போனில் வாழ்த்து!

மு.க ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் போனில் வாழ்த்து!

sharpana

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் போனில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 157 இடங்களில் தற்போது முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், பல தரப்பினரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மு.க ஸ்டாலினுக்கு போனில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.  அதோடு, தனது ட்விட்டர் பக்கத்திலும், “ அன்பு நண்பர் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி  திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான தமிழகமாக்க வேண்டும்” எம்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.