தமிழ்நாடு

உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினிகாந்த்

உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - ரஜினிகாந்த்

webteam

நடந்த வன்முறை மற்றும் மக்கள் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் நுழைந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜெயராமன், கிளாட்ஸன், கந்தையா, வினிஸ்டா, தமிழரசன், சண்முகம், மற்றும் மணிராஜ் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து துத்துக்குடி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் எஸ்பி அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது, மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்வபங்களுக்குஅரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கண்டனத்தில், “மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - தலைவர் ரஜினிகாந்த்” என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.