தமிழ்நாடு

ரஜினிகாந்த், திருமாவளவன், திருநாவுக்கரசர் சந்திப்பு - காரணம் ?

ரஜினிகாந்த், திருமாவளவன், திருநாவுக்கரசர் சந்திப்பு - காரணம் ?

webteam

நடிகர் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் சந்தித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்காக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பத்திரிகை வழங்கி வருகிறார். அதன்படி, சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசரின் வீட்டிற்கு இன்று பத்திரிகை வைக்க சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், தங்கள் கட்சி மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிப்பதற்காக விசிக தலைவர் திருமாளவன் அங்கு வந்துள்ளார். 

இதனால் மூன்று பேரும் ஒரே நேரத்தில் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. மூன்று பேரும் நலம் விசாரித்துக்கொண்டனர். திருநாவுக்கரசருக்கு அழைப்பிதழ் வங்கிய பின்னர், அப்படியே திருமாவளனுக்கும் அழைப்பிதழை ரஜினி வழங்கியுள்ளார். இது ஒரு எதார்த்தமான சந்திப்பு என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவில் ரஜினியை திருநாவுக்கரசர் சந்தித்தார் எனக்கூறப்பட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அத்துடன் அவர் அண்மையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.