இன்று ரஜினியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறையினரும், அரசியல் கட்சி தலைவர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்தப் பதிவில், “இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கும், எதிர்கட்சித் தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்தநாளைக் கொண்டாடிவரும் உலகெங்கிலும் உள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று நெகிழ்ச்சியுடன் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அதேபோல், பிரதமர் மோடிக்கும் தனியாக, “மரியாதைக்குரிய மோடி, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி” என்று ரஜினி தெரிவித்து இருந்தார்.