தமிழ்நாடு

ரஜினி மன்றம் வாட்ஸ்அப் குழுக்களுக்கு புதிய கட்டுப்பாடு !

ரஜினி மன்றம் வாட்ஸ்அப் குழுக்களுக்கு புதிய கட்டுப்பாடு !

webteam

ரஜினி கடந்த 2017 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அறிவித்திருந்தார். இதனால் ரஜினி மக்கள் மன்றங்கள் அனைத்தும் இதற்கான சமூக பணிகளைச் செய்துவருகின்றன. இந்நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றம் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

  1. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸப் குழுமங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் தான் உறுப்பினராக இருக்க வேண்டும். பிற மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் யாரும் அந்த வாட்ஸப் குழுமங்களில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்த வாட்ஸப் குழும அட்மின் உடனடியாக அந்த நபர்களை அந்த குழுமங்களில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும்.
  2. ரஜினி மக்கள் மன்றம்- (மாவட்டம் பெயர்)( ஒன்றிய/நகர/ பகுதி) என்ற பெயரில்  மட்டும் தான் அப்படிப்பட்ட குழுமங்கள் இருக்கவேண்டும். மனதிற்கு தோன்றும் பெயர்களை எல்லாம் அதிகாரபூர்வ குழுமங்களுக்கு வைக்கக்கூடாது. 
  3. மன்றத்தை விட்டு நீக்கப்பட்ட நபர்கள் யாரையும் ரஜினி மக்கள் மன்றத்தின் எந்த வாட்ஸப் குழுமங்களிலும் உறுப்பினராக சேர்க்கக்கூடாது.
  4.  
  5. அப்படி மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட நபர்கள் நடத்தும் வாட்ஸப் குழுமங்களில் அல்லது அப்படிப்பட்ட நபர்கள் உறுப்பினராக இருக்கும் வாட்ஸப் குழுமங்களில் மன்ற நிர்வாகிகள் யாரும் உறுப்பினராக இருத்தல் கூடாது. 
  6. மன்றத்தின் இந்த கட்டுப்பாட்டை அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பேணுதல் மிகவும் அவசியம்.
  7. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குரூப்களில் சேர்க்கக்கூட்டாது என கட்டுப்பாடு. 
  8. மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களை மட்டுமே வாட்ஸப் குரூப்பில் சேர்க்க வேண்டும். மேலும் வாட்ஸப் குரூப்பிற்கு ரஜினி மக்கள் மன்றம் என்று மட்டுமே பெயர் வைக்க வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.