தமிழ்நாடு

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை - ரஜினிகாந்த்

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை - ரஜினிகாந்த்

webteam

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேசினார். குறிப்பாக கட்சி தொடங்கினால் தான் பின்பற்றப்போகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், முதல்வர் பதவியை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் முடிவு என தெரிவித்தார். மேலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.