தமிழ்நாடு

மக்கள் மன்றப் பணிகளில் தீவிரம் காட்டும் ரஜினி

மக்கள் மன்றப் பணிகளில் தீவிரம் காட்டும் ரஜினி

webteam

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது மக்கள் மன்றப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிந்து அண்மையில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இதையடுத்து, அவரை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளும் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்து விவாதித்து வருகின்றனர். 

மன்றத்திலிருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டதாக தகவல்‌ பரவிய நிலையில் அவர் இன்று ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். மன்றத்திலிருந்து அவர் நீக்கப்படவில்லை என தலைமை நிர்வாகி சுதாகர் தெரிவித்திருக்கிறார். அரசியலில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள ரஜினி, தனது கட்சி மற்றும் கொள்கைகளை நேரம் வரும்போது அறிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், ரஜினியை சந்தித்துப் பேசியது குறித்து தமிழருவி மணியனிடம் கேட்டபோது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படம் வெளிவந்த பிறகு, தனது அரசியல் பணியை ரஜினி தொடங்குவார் எனத் தெரிவித்தார்.