தமிழ்நாடு

ரஜினியின் முடிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் : ரஜினி மக்கள் மன்றம்

webteam

ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் உண்மையான காவலர்கள் கலந்து கொள்ள கூடாது என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட செயலாளர் சந்தானம் வெளியிட்ட அறிவிப்பில், “நம் மக்கள் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் 10.01.2021 அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவருகிறது. அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட, பகுதி, வட்ட பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது, மீறி கலந்துகொள்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது