அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினி வெளியிடுவார் என அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி தொடங்கினால் சாதக பாதககங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார் ரஜினி. கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பாக பரப்புரை மெற்கொள்வது குறித்தும் அவர் கேட்டறிந்துள்ளார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கட்சி ஆரம்பித்தால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு மண்டபத்தின் பால்கனியில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் கையசைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் “இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினி முடிவை அறிவிப்பார். அவர் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதை வரவேற்போம். அது எங்களுக்கு மகிழ்ச்சியே” எனத் தெரிவித்தனர்.