தமிழ்நாடு

ரஜினி ரசிகரின் கால் துண்டான பரிதாபம் !

ரஜினி ரசிகரின் கால் துண்டான பரிதாபம் !

webteam

ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த ரஜினி ரசிகரின் கால்கள் துண்டானது. 

மதுரை அடுத்து விளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். கூலித் தொழிலாளியான இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார். நேற்று இவர் தன் நண்பர்களுடன் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின்பு  இன்று அதிகாலை சென்னை எழும்பூரிலிருந்து, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு புறப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம்  சிங்கப்பெருமாள் கோவில் அருகே வரும்போது ரயிலில், படிக்கட்டில் அமர்ந்திருந்த காசி விஸ்வநாதன் இரண்டு கால்களும் ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையில் சிக்கியது. இதில் அவரது இரண்டு கால்களும் துண்டானது உடனடியாக அவர், செங்கல்பட்டு  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு சென்னை கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.