தமிழ்நாடு

உயர்மின் அழுத்த வயர்களில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்கள்

கலிலுல்லா

உயர் மின் அழுத்த மின்சார வயரில் மின் தடை செய்யாமலேயே உரிய பாதுகாப்பு உடையுடன் ஊழியர்கள் பணியாற்றும் வீடியோ ஒன்றை தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

40 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும் வயரில் மின்சாரத்தை நிறுத்தாமலே மின்வாரிய ஊழியர்கள் பணி செய்யும் அற்புதமான காட்சி என அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஊழியர் மின்சாரம் தாக்காத தற்காப்பு உடையை அணிந்துகொண்டுதான் பணி புரிவதாகவும் அவர் தனது பதிவிலேயே விளக்கமளித்துள்ளார்.

மின்சார ஊழியர்கள் ஃபாரடே சூட் எனப்படும் மின்சாரத்தை கடத்தாத பொருட்களால் தயாரிக்கப்பட்ட உடையை அணிந்துகொண்டு உயர் அழுத்த மின்சார வயர்களில் பணியாற்றுவது உலக அளவில் வழக்கமான நடைமுறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.