தமிழ்நாடு

திரைப்படத்தில் நடிப்பது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்க கூடாது : ராஜேந்திர பாலாஜி 

திரைப்படத்தில் நடிப்பது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்க கூடாது : ராஜேந்திர பாலாஜி 

webteam

திமுக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது எனவும் ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் கிடையாது எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “மத்திய அரசு ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது பொருத்தமானது. அவரது நடிப்புக்கு, அவரது பணிக்கு, அவரது யதார்த்தமான பேச்சிற்ககு கிடைத்திருக்கின்ற விருது. அவர் தமிழக மக்களை நேசிப்பதற்காக கிடைத்திருக்கின்ற விருது. ஒரு உயரிய விருதை மத்திய அரசு அவருக்கு வழங்குகிறது. இந்த விருதை பெற்றிருக்கின்ற ரஜினிக்கு எனது வாழ்த்துகள்.

இந்த விருதை மத்திய அரசு முன்கூட்டியே கொடுத்திருக்கலாம். மத்திய அரசு, காலம் தாழ்த்தி இந்த விருதை வழங்கி இருந்தாலும் பொருத்தமான நபருக்கு வழங்கியுள்ளது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். தவறில்லை. நடிப்பவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும். திரைப்படத்தில் நடிப்பது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்க கூடாது. ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு நடிகர்கள் வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் அரசியல் பேசுகிறார்கள். அதை  சந்திக்கத்தான் அதிமுக உள்ளது. அதிமுகவை வீழ்த்த இனி ஒருவன் பிறந்து வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.