தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்கு முடக்கம் - காவல்துறை நடவடிக்கை

கலிலுல்லா

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்கை காவல்துறை முடக்கியது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 17ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக-வின் கண்டன ஆர்ப்பாட்டத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வெவ்வேறு கார்களில் அவர் மாறிமாறி சென்றுள்ளதாக கூறி, அவரை பிடிக்க 8 தனிப்படைகள் காவல்துறை தரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரில் உள்ள 6 வங்கிக் கணக்குகளையும் முடக்கி காவல்துறை நடவடிக்கைஎ டுத்துள்ளது. தொடர்ந்து, 9வது நாளாக காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியை தேடிவருகின்றனர்.