தமிழ்நாடு

“அதிமுகவை வீழ்த்த பலர் நினைக்கிறார்கள்” - ராஜன் செல்லப்பா

“அதிமுகவை வீழ்த்த பலர் நினைக்கிறார்கள்” - ராஜன் செல்லப்பா

webteam

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என சலசலப்பை ஏற்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் கடந்த சில நாட்களாக மாறுபட்ட கருத்துகள் எழுந்து வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக அதிமுக ஒற்றை தலைமையில் செயல்பட வேண்டும் என அக்கட்சியின் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், ராஜன் செல்லப்பா மதுரையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், அதிமுகவில் கட்டுப்பாடு மிகவும் அவசியம் எனக்கூறியுள்ளார். அந்தக் கட்டுப்பாடு என்பது அமைச்சர்கள், தலைவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை வீழ்த்த பலர் நினைப்பதாகவும், ஆனால் அது நிறைவேறாது என்றும் கூறினார்.