தமிழ்நாடு

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு - எவ்வளவு தெரியுமா?

JustinDurai

மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்துவதால் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி டாஸ்மாக் மது பானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர்ரக மது பானங்களுக்கு ரூ.40, புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும்  உயர்த்த பட்டுள்ளது. பீர் வகைகளுக்கு ரூ.10 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு மது வகைகளுக்கு ரூ.10.35 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. பீர் வகைகளுக்கு ஒரு நாளைக்கு 1.76 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4,396 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க: "சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமை ஆக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை