வடகிழக்கு பருவமழை வலுபெற்றதை அடுத்து 14 மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனைத்தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தமிழகம் மற்றும் சென்னையில் மழை தொடர்ந்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் முதலிய 14 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது..