மதுரை மேலூர் பகுதிகளில் நேற்று பலத்தக் காற்றுடன் பெய்த கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள வாழைமரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வெயில் தாக்கத்தால் பெரிதும் சிரமம் அடைந்து வந்த நிலையில், நேற்று மாலை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இந்த கனமழையால் திருவாதவூர், ஆண்டிப்பட்டி, தனியாமங்கலம், கட்டையம்பட்டி, பூஞ்சுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள வாழை மரங்கள், சாய்ந்து முற்றிலும் சேதமானது, இதனால் பல இலட்ச இழப்பு ரூபாய் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாதவூர் பகுதியில் ஓஞ்சு, மணிகண்டன், கனிமொழி உள்ளிட்டவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மீது மரம் விழுந்ததில் வீடுகளும் சேதமடைந்துள்ளன.