தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட 33 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகப் பகுதியில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகப் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.