தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடையாறு, வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுதாக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்திலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.