வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 7 சென்டி மீட்டரும், சீர்காழியில் 6 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.