வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பெய்த கனமழை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், இன்று பகல் நேரங்களில் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. கிண்டி, வளசரவாக்கம், கே.கே.நகர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
இதற்கிடையில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு வங்கக்கடலில் வரும் 30ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மழை பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.