தமிழ்நாடு

மழை நீர் போதும்... என்கிறார் இந்த ஓய்வு பெற்ற பொறியாளர்

மழை நீர் போதும்... என்கிறார் இந்த ஓய்வு பெற்ற பொறியாளர்

Rasus

தண்ணீருக்காக தமிழகமே தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவ்வபோது பெய்யும் மழைநீரை சேகரித்து வைத்து அதைத் தங்களின் அன்‌றாட தேவைகளுக்கு பயன்படுத்தி முன்னுதாரணமாக திகழ்கிறது இந்தக் குடும்பம்

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஊராட்சி கோட்டை பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன். மென்பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இயற்கையோடு இயைந்து வீட்டை அமைத்துள்ள இவர், வீடு முழுவதும் தண்ணீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்துள்ளார். ஒரு முறை பெய்யும் மழையை இவற்றின் மூலம் சேமித்து அதன் மூலம் ஆண்டுக்கான தண்ணீர் தேவையை இவர் பூர்த்தி செய்து கொள்கிறார். இதற்காக வீட்டின் மாடியில் மழை நீர் தேங்கும் இடத்தில், தகர பெட்டியில் மணல், ஜல்லி, கரி ஆகியவற்றை கொண்டு மழை நீரை வடிகட்டும் முறையை சிவசுப்பிரமணியன் அமைத்துள்ளார்., அங்கு வடிகட்டப்படும் தண்ணீரானது நேராக அனைத்து தொட்டிகளையும் சென்றடையுமாறு குழாய்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

500 சதுர அடி அளவில் பெய்யும் மழையானது 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளதாக கூறும் சிவசுப்பிரமணியன், மிகக் குறைவான விலையில் அனைவருமே இது போன்று மழை நீர் சேகரிப்பை கையாள முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பை வலியுறுத்தும் சிவசுப்பிரமணியன், இதனை தங்கள் மகள்களின் வீடுகளிலும் வடிவமைத்து கொடுத்திருக்கிறார்.