தமிழகத்தில் நாளையும் நான்கு மற்றும் ஐந்தாம் தேதியன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே இரு தினங்களுக்கு முன் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்தது. இதையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியதால், தென் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தவிர நான்காம் தேதி மற்றும் ஐந்தாம் தேதியன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.