தமிழ்நாடு

‘நாளை முதல் மழை படிப்படியாக குறையும்’ - இந்திய வானிலை மையம்

‘நாளை முதல் மழை படிப்படியாக குறையும்’ - இந்திய வானிலை மையம்

webteam

தென் கிழக்கு அரபி கடலில் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அது மேற்கொண்டு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் தென்கிழக்கு அரபிக்கடலில் மற்றும் லட்சத்தீவு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவி வருவதாகவும் இதுவும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக மாறும் என்றும்  இதனால்  தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் 3 ஆம் தேதி மற்றும் 4, 5 தேதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆகவே அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கேரளா - கர்நாடகா கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.