சென்னையிலிருந்து 340 கி.மீ தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புதுச்சேரியிலிருந்து 300 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்கிறது எனவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.