வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை, நகரின் சில பகுதிகளில், மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் வீரபாண்டியில் 12 சென்டி மீட்டர் மழையும், கொடைக்கானலில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.