தமிழ்நாடு

சென்னை: நள்ளிரவில் பெய்த மழை... இன்றும் மழைக்கு வாய்ப்பு

சென்னை: நள்ளிரவில் பெய்த மழை... இன்றும் மழைக்கு வாய்ப்பு

PT WEB

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கோவை, நீலகிரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று இரவில் பலத்த மழை பெய்தது. பகலில் வெப்பம் குறைவாக இருந்தபோதிலும் இரவில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அதிகாலையில் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் கனமழை பெய்தது. அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்த நிலையில், பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வழக்கம்போல் மழை நீர் தேங்கியது.

அதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, நாகை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் நீலகிரி, கோவையில் இன்று முதல் 4 நாட்களுக்கும், கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.