தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு

rajakannan

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அவ்வவ்போது மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மாலை நேரங்களில் திடீரென லேசான தூரல் விட்டுவிட்டு பெய்கிறது. கடந்த ஒரு வாரமாகவே வானிலை மேகமூட்டத்துடன்தான் காணப்படுகிறது. 

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், வட மற்றும் உள் மாவட்‌டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.