தமிழ்நாடு

காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

webteam

காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்தது. நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வேளாங்கண்ணி, திருக்குளவை, திட்டச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதேபோல், கடலூர், விருத்தாசலம், சேலம் போன்ற இடங்களிலும் மழை பொழிந்தது.

இந்நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.