தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் வறண்ட வானிலையே காணப்பட்டது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த வானிலை ஆய்வு மையம், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும் இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்