rain
rain pt desk
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5 தினங்களுக்கு மழை தொடர வாய்ப்பு: வானிலை மையம் சொல்வதென்ன?

webteam

‘சட்டென்று மாறுது வானிலை’ என்று சொல்வார்களே... அது எங்கு பொருந்துகிறதோ இல்லையோ, சென்னைக்கு நிச்சயமாக பொருந்தும். ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி அளவுக்கு வெயில் பாதிவானது. இதைத்தொடர்ந்து, ஒருசில நாளிலேயே நேற்று அதிகபட்ச மழையும் அங்குதான் பதிவானது.

chennai rain

இந்த திடீர் மழைக்கு, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியிருக்கிறது என்பதுதான் காரணம். இதனால் தமிழத்தில் அடுத்து 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட தமிழகம், தென் தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (செவ்வாய்) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருபத்தூர், தி.மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் மழை பற்றிய முழு தகவல்களை அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்: