மழை எக்ஸ் தளம்
தமிழ்நாடு

சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

சென்னை புறநகர் பகுதிகளான மாதவரம், புழல், மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அம்பத்தூர் சுற்றுப்வட்டாரப் பகுதிகளிலும் இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,வ் விருதுநகர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.