தமிழ்நாடு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை!

sharpana

தமிழகத்தின்  திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

  • திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இன்றும் திருவாரூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை மற்றும் வண்டாம்பாளை, அடியக்கமங்கலம், ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது.
  • நாகை மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, ஆறுகாட்டுத்துறை தோப்புத்துறை, நெய்விளக்கு, தேத்தாக்குடி ஆதனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக ஒரு மணிநேரத்திற்கு மேல் கன மழை பெய்தது.
  • மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,வைத்தீஸ்வரன் கோவில்,தென்பாதி,சட்டநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
  • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான,குமாரபுரம் வீரபாண்டியன் பட்டினம்உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை பெய்தது.
  • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், எட்டிசேரி, தூரி, காஞ்சரங்குளம், பேரையூர், சித்திங்குடி உள்ளிட்ட முதுகுளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

”இந்த மழையால் கோடை உழவு செய்வதற்கு ஏதுவாக இருக்கும்” என்கிறார்கள் விவசாயிகள்.