தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

webteam

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அநேகமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை அடுத்து வரும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது